2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(05) ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.
தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஜனவரி 21 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதுவரை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இல்லாதிருப்பது அதிபர்களையும் ஆசிரியர்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் வழங்கப்பட வேண்டிய மாணவர் வருகைப் பதிவேடுகள் இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை.
தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் தொகுதிகளில் நூற்றுக்கணக்கான இலக்கணப் பிழைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பாடப்புத்தகங்களை தயாரிப்பதில் தகுதியான நபர்கள் உள்வாங்கப்பட்டார்களா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளுக்கு தீர்வாக, குறிப்பிட்ட பக்கங்களை அகற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு சுமார் 8 இலட்சம் பக்கங்கள் அகற்றப்பட வேண்டியுள்ளன. இந்த வேலையை யார் செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், இந்தப் பாடப்புத்தகங்களின் டிஜிட்டல் பிரதிகள் ஏற்கனவே இணையத்தில் பரவியுள்ள நிலையில், அச்சுப் பிரதிகளில் இருந்து பக்கங்களை கிழிப்பதன் மூலம் பிழைகளை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கல்விப் பொருட்களில் பிழைகள் கண்டறியப்பட்டால், "பக்கங்களை அகற்றுவதையே" அரசாங்கம் ஒரு தீர்வாக முன்னெடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தரம் 6 மாணவர்களுக்கு தொடரும் பிரச்சினை 2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(05) ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஜனவரி 21 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன. அதுவரை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இல்லாதிருப்பது அதிபர்களையும் ஆசிரியர்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் வழங்கப்பட வேண்டிய மாணவர் வருகைப் பதிவேடுகள் இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை. தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் தொகுதிகளில் நூற்றுக்கணக்கான இலக்கணப் பிழைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பாடப்புத்தகங்களை தயாரிப்பதில் தகுதியான நபர்கள் உள்வாங்கப்பட்டார்களா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளுக்கு தீர்வாக, குறிப்பிட்ட பக்கங்களை அகற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு சுமார் 8 இலட்சம் பக்கங்கள் அகற்றப்பட வேண்டியுள்ளன. இந்த வேலையை யார் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், இந்தப் பாடப்புத்தகங்களின் டிஜிட்டல் பிரதிகள் ஏற்கனவே இணையத்தில் பரவியுள்ள நிலையில், அச்சுப் பிரதிகளில் இருந்து பக்கங்களை கிழிப்பதன் மூலம் பிழைகளை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் கல்விப் பொருட்களில் பிழைகள் கண்டறியப்பட்டால், "பக்கங்களை அகற்றுவதையே" அரசாங்கம் ஒரு தீர்வாக முன்னெடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.