• Sep 14 2026

வவுனியாவில் இதுவரை 40 வீத மழை வீழ்ச்சியே பதிவு - மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்

Ziya / Sep 14th 2026, 4:27 pm
image

வவுனியா மாவட்டத்தில்  2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40  வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.


மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.


வவுனியா மாவட்டத்தினனை பொறித்த வரை  வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியானது 1400 மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. எனினும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 559.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.


இதேவேளை நேற்றையதினம் 21.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இம்மாதம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இம்மாதத்தின் (செப்டம்பர்) இறுதியில் இருந்து வடகீழ் பருவமழை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்தில் அதிகளவான மழை  பெய்யக்கூடும்.


குறிப்பாக இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவான கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்  தெரிவித்தார்.

வவுனியாவில் இதுவரை 40 வீத மழை வீழ்ச்சியே பதிவு - மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் வவுனியா மாவட்டத்தில்  2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40  வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்தினனை பொறித்த வரை  வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியானது 1400 மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. எனினும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 559.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.இதேவேளை நேற்றையதினம் 21.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இம்மாதம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இம்மாதத்தின் (செப்டம்பர்) இறுதியில் இருந்து வடகீழ் பருவமழை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்தில் அதிகளவான மழை  பெய்யக்கூடும்.குறிப்பாக இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவான கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement