• Apr 16 2026

நாட்டின் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை ரணிலால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும்! – வஜிர சூளுரை

Chithra / Apr 16th 2026, 10:47 am
image

வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை  அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.


காலியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,


கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்றதுபோலவே தற்போதும் நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தவறை ஏற்றுக்கொண்டுள்ளது. 


கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறை செய்யாமல் இருப்பதற்கே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கத்தின் தவறுகளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தவறுகள்  இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தப்பித்துக்கொள்ள முடியாது.


அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப  பல சட்டங்களை எமது காலத்தில்  நாங்கள் ஏற்படுத்தி இருந்தோம். குறிப்பாக பொருளாதார கொள்கை சட்டம் தற்போது முற்றாக மீறப்பட்டு வருகிறது. இது பாரிய பிரச்சினையாகும். அதனால் நாட்டடை மீண்டும் கட்டியெழுப்ப பாரிய மாற்றம் தேவையாகும். 


அதனால் அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக இருந்தால் அதனை 50 வருடகால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும். அவருக்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் சிறந்த அனுபவம் இருப்பதுடன் சர்வதேசம் தொடர்பில் சிறந்த புரிதல் இருக்கிறது. அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்காெள்ளாவிட்டால் இந்த நாடு மீண்டும், காலனித்துவ நிலைக்கு செல்லும்.


ரணில் விக்ரமசிங்க 2022 நாட்டை பொறுப்பேற்கும்போது டொலர் ஒன்று சட்ட ரீதியில் 380 ரூபாவுக்கு இருந்தது. வெளியில் 400 ரூபாவுக்கு விற்பனையாகி வந்தது.


என்றாலும் நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின்  பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்லவே  திட்டமிட்டு வந்தார்  என தெரிவித்தார். 

நாட்டின் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை ரணிலால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – வஜிர சூளுரை வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை  அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.காலியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்றதுபோலவே தற்போதும் நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தவறை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறை செய்யாமல் இருப்பதற்கே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கத்தின் தவறுகளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தவறுகள்  இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தப்பித்துக்கொள்ள முடியாது.அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப  பல சட்டங்களை எமது காலத்தில்  நாங்கள் ஏற்படுத்தி இருந்தோம். குறிப்பாக பொருளாதார கொள்கை சட்டம் தற்போது முற்றாக மீறப்பட்டு வருகிறது. இது பாரிய பிரச்சினையாகும். அதனால் நாட்டடை மீண்டும் கட்டியெழுப்ப பாரிய மாற்றம் தேவையாகும். அதனால் அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக இருந்தால் அதனை 50 வருடகால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும். அவருக்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் சிறந்த அனுபவம் இருப்பதுடன் சர்வதேசம் தொடர்பில் சிறந்த புரிதல் இருக்கிறது. அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்காெள்ளாவிட்டால் இந்த நாடு மீண்டும், காலனித்துவ நிலைக்கு செல்லும்.ரணில் விக்ரமசிங்க 2022 நாட்டை பொறுப்பேற்கும்போது டொலர் ஒன்று சட்ட ரீதியில் 380 ரூபாவுக்கு இருந்தது. வெளியில் 400 ரூபாவுக்கு விற்பனையாகி வந்தது.என்றாலும் நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின்  பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்லவே  திட்டமிட்டு வந்தார்  என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement