• May 18 2025

குறுந்தூர ரயில் சேவைகள் மட்டுமே இன்று இயக்கப்படும் - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Thansita / May 17th 2025, 8:02 am
image

காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே இன்று (17)  ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். 

அதன்படி, நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

வேலை நிறுத்த நடவடிக்கையின் காரணமாக, நேற்று இரவு இயக்கப்படவிருந்த அனைத்து தபால் ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


குறுந்தூர ரயில் சேவைகள் மட்டுமே இன்று இயக்கப்படும் - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே இன்று (17)  ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். அதன்படி, நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுபல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். வேலை நிறுத்த நடவடிக்கையின் காரணமாக, நேற்று இரவு இயக்கப்படவிருந்த அனைத்து தபால் ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement