• Nov 26 2024

பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளராகக் களமிறங்குவார் - சாகர காரியவசம் தெரிவிப்பு..!!

Tamil nila / May 24th 2024, 9:23 pm
image

போரை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தது போல் பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,,

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கக் கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர். உரிய நேரம் வரும்போது வெற்றி வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி நடைபோடுவோம்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துக் கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர் பெயரை, கட்சி முடிவை மீறி அறிவிக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர். தலா தேசிய உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்தார். அப்போது தம்மிக்க பெரேரா மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகவும், முதலீட்டுச் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நாட்டை மீட்கக்கூடிய தலைவராகவே மஹிந்த ராஜபக்ஷவை அன்று மக்கள் தெரிவு செய்தனர். அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதேபோல் பொருளாதாரப் போரை வெற்றி கொண்டு, நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்துவோம்." - என்றார்.

பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளராகக் களமிறங்குவார் - சாகர காரியவசம் தெரிவிப்பு. போரை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தது போல் பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,,"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கக் கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர். உரிய நேரம் வரும்போது வெற்றி வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி நடைபோடுவோம்.ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துக் கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர் பெயரை, கட்சி முடிவை மீறி அறிவிக்க முடியாது.மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர். தலா தேசிய உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்தார். அப்போது தம்மிக்க பெரேரா மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகவும், முதலீட்டுச் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.நாட்டை மீட்கக்கூடிய தலைவராகவே மஹிந்த ராஜபக்ஷவை அன்று மக்கள் தெரிவு செய்தனர். அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதேபோல் பொருளாதாரப் போரை வெற்றி கொண்டு, நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்துவோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement