• Mar 20 2025

வவுனியாவில் மூன்றுகட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல்!

Thansita / Mar 19th 2025, 11:28 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் கடந்த இருதினங்களாக இடம்பெற்றுவருகின்றது. 

இந்நிலையில் வவுனியாமாவட்டத்தில் இன்று மாலைவரை இலங்கைதமிழரசுக்கட்சி,அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ்,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. குறித்த கட்சிகளும் மாவட்டத்தில் உள்ள சில சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே தாக்கல்செய்துள்ள நிலையில் நாளையதினம் ஏனைய சபைகளுக்கு தாக்கல்செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை மாவட்டத்தில் 50ற்கும் மேற்ப்பட்ட தரப்புக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.  நாளைமதியம் 12.30 மணிவரை மாத்திரமே வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் ஏனைய தரப்புக்கள் நாளையதினத்தில் தமது மனுக்களை தாக்கல்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இம்முறை உள்ளூராட்சி சபைத்தேர்தல் முறைமையின் அடிப்படையில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களுக்கு வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் இழுபறி நிலை ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் முன்னணி கட்சிகளும் வேட்பாளர்களை தேடி அலைந்து திரியும் நிலைமையினை அவதானிக்க முடிகின்றது.

வவுனியாவில் மூன்றுகட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.இந்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் கடந்த இருதினங்களாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் வவுனியாமாவட்டத்தில் இன்று மாலைவரை இலங்கைதமிழரசுக்கட்சி,அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ்,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. குறித்த கட்சிகளும் மாவட்டத்தில் உள்ள சில சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே தாக்கல்செய்துள்ள நிலையில் நாளையதினம் ஏனைய சபைகளுக்கு தாக்கல்செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.இதேவேளை மாவட்டத்தில் 50ற்கும் மேற்ப்பட்ட தரப்புக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.  நாளைமதியம் 12.30 மணிவரை மாத்திரமே வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் ஏனைய தரப்புக்கள் நாளையதினத்தில் தமது மனுக்களை தாக்கல்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை உள்ளூராட்சி சபைத்தேர்தல் முறைமையின் அடிப்படையில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களுக்கு வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் இழுபறி நிலை ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் முன்னணி கட்சிகளும் வேட்பாளர்களை தேடி அலைந்து திரியும் நிலைமையினை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement