• Feb 03 2026

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியின் ஆரம்ப பிரிவு திறப்பு விழா!

dileesiya / Feb 2nd 2026, 10:48 am
image

திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிஆரம்பப் பிரிவு (Primary Division) திறப்பு விழா நிகழ்வு நேற்று (01)  இடம்பெற்றுள்ளது.


வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு இதனை திறந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். 


பாடசாலை மாணவர்களால் பிரதம விருந்தினர்கள் வேன்ட் இசை வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டனர்.


பழைய சந்தை கட்டிட தொகுதி சுமார்  30 வருட கால குத்தகைக்கு எடுக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு குறித்த ஆரம்ப பிரிவின் கட்டிடங்கள்   திருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


கல்வியினை மேம்படுத்தி வகுப்பறை பற்றாக்குறையை நீக்கும் முகமாகவும் மாணவர்களின் கல்வி திறன் வசதியை மேம்படுத்தும் முகமாக குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.


இதில்  திருகோணமலை மாநகர சபை மேயர் க. செல்வராசா (சுப்ரா) கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவிக்கையில்,


 இந்த உலகத்தில் அழிக்க முடியாத செல்வம் கல்வி கல்வி மட்டும் ஒரு போதும் அழியாது பணம் இருந்தால் கண்முன்னே அழிந்து போகும் ஆகவே இந்த மாணவர்களுக்கு கல்வியை புகட்ட வேண்டும் கல்வியை புகட்ட அடிப்படை வளங்கள் தேவை . 


நவீன கல்வி முறைக்கேற்ப சகல வசதிகளையும் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். 


ஆசிரியர் தொழில் என்றில்லாமல் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்கும் முயற்சிக்க வேண்டும் இங்குள்ள இரு பிள்ளைகளாவது நாசாவுக்கு செல்ல வேண்டும் அதுவே பெருமை தமிழ் நாட்டு மாணவிகள் பலர் நாசாவில் உள்ளார்கள்.


நாமும் இன்னும் பலரை இங்கிருந்து நாசாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.


திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியின் ஆரம்ப பிரிவு திறப்பு விழா திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிஆரம்பப் பிரிவு (Primary Division) திறப்பு விழா நிகழ்வு நேற்று (01)  இடம்பெற்றுள்ளது.வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு இதனை திறந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். பாடசாலை மாணவர்களால் பிரதம விருந்தினர்கள் வேன்ட் இசை வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டனர்.பழைய சந்தை கட்டிட தொகுதி சுமார்  30 வருட கால குத்தகைக்கு எடுக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு குறித்த ஆரம்ப பிரிவின் கட்டிடங்கள்   திருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.கல்வியினை மேம்படுத்தி வகுப்பறை பற்றாக்குறையை நீக்கும் முகமாகவும் மாணவர்களின் கல்வி திறன் வசதியை மேம்படுத்தும் முகமாக குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.இதில்  திருகோணமலை மாநகர சபை மேயர் க. செல்வராசா (சுப்ரா) கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவிக்கையில், இந்த உலகத்தில் அழிக்க முடியாத செல்வம் கல்வி கல்வி மட்டும் ஒரு போதும் அழியாது பணம் இருந்தால் கண்முன்னே அழிந்து போகும் ஆகவே இந்த மாணவர்களுக்கு கல்வியை புகட்ட வேண்டும் கல்வியை புகட்ட அடிப்படை வளங்கள் தேவை . நவீன கல்வி முறைக்கேற்ப சகல வசதிகளையும் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். ஆசிரியர் தொழில் என்றில்லாமல் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்கும் முயற்சிக்க வேண்டும் இங்குள்ள இரு பிள்ளைகளாவது நாசாவுக்கு செல்ல வேண்டும் அதுவே பெருமை தமிழ் நாட்டு மாணவிகள் பலர் நாசாவில் உள்ளார்கள்.நாமும் இன்னும் பலரை இங்கிருந்து நாசாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement