எதிர்வரும் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேர்தல் மத்திய நிலையம் இன்று(10) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்திற்கு அருகில் பிரத்தியேகமாக இவ் தேர்தல் மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் மத்திய நிலையத்தை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நாடா வெட்டி திறந்துவைத்தார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, காஞ்சனா விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்கள் ஷசீந்திர ராஜபக்ஷ. , கனக ஹேரத், டி.பி ஹேரத், பியால் நிஷாந்த, ஜானக வக்கம்புர, தேனுக விதானகமகே, இந்திக்க அனுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, டி.வீரசிங்க, கோகிலா ஹர்ஷனி, எஸ்.எம்.சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் மத்திய நிலையம் திறப்பு. பசில் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு. எதிர்வரும் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேர்தல் மத்திய நிலையம் இன்று(10) திறந்துவைக்கப்பட்டுள்ளது.பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்திற்கு அருகில் பிரத்தியேகமாக இவ் தேர்தல் மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின் தேர்தல் மத்திய நிலையத்தை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நாடா வெட்டி திறந்துவைத்தார்.பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, காஞ்சனா விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்கள் ஷசீந்திர ராஜபக்ஷ. , கனக ஹேரத், டி.பி ஹேரத், பியால் நிஷாந்த, ஜானக வக்கம்புர, தேனுக விதானகமகே, இந்திக்க அனுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, டி.வீரசிங்க, கோகிலா ஹர்ஷனி, எஸ்.எம்.சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.