• Nov 13 2025

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்

Chithra / Nov 12th 2025, 7:10 pm
image


தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். 

உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வெங்காயத்திலான மாலை அணிந்து சென்றுள்ளனர். 

அத்துடன், அவர்கள் விவசாயியின் மகன் அரசனானான் ... விவசாயி பாழானான்... என கோஷமிட்டவாறு சபைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதேச சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. 

அதன்போதும், பெரிய வெங்காயத்திற்கு விலை இன்மை மற்றும் அழிந்துபோன வெங்காயத்திற்கு நட்டஈடு கோரிய நிலையில் விவாதங்கள் நடைபெற்றதுடன் சபையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.


வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர் தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வெங்காயத்திலான மாலை அணிந்து சென்றுள்ளனர். அத்துடன், அவர்கள் விவசாயியின் மகன் அரசனானான் . விவசாயி பாழானான். என கோஷமிட்டவாறு சபைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதேச சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன்போதும், பெரிய வெங்காயத்திற்கு விலை இன்மை மற்றும் அழிந்துபோன வெங்காயத்திற்கு நட்டஈடு கோரிய நிலையில் விவாதங்கள் நடைபெற்றதுடன் சபையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement