• Jul 13 2026

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Chithra / Jul 10th 2026, 3:44 pm
image


நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது. 


நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. 


அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) பாராளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது. நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) பாராளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement