ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் யாழில் இன்றையதினம்(09) கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது.
பின்னர், ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகளாவன :
1. புதிதாக உருவாக்கப்பட்ட மீனவர் சட்ட வரைபை நிராகரித்தல்
2. வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல்
3. வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது.
4. வெளிநாட்டு படகுகளில் இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரல்
5. கடற்றொழிலாளர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் - என்பனவாகும்.
இந்த கவனயீர்ப்பு பேரணியின்போது ஊர்காவற்றுறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர் அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர் ஜே.ஜோகராஜ் மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மீனவர் சட்ட வரைபுக்கு எதிர்ப்பு. யாழில் இடம்பெற்ற பேரணி.samugammedia ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் யாழில் இன்றையதினம்(09) கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது.பின்னர், ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகளாவன :1. புதிதாக உருவாக்கப்பட்ட மீனவர் சட்ட வரைபை நிராகரித்தல்2. வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல்3. வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது.4. வெளிநாட்டு படகுகளில் இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரல்5. கடற்றொழிலாளர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் - என்பனவாகும்.இந்த கவனயீர்ப்பு பேரணியின்போது ஊர்காவற்றுறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர் அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர் ஜே.ஜோகராஜ் மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.