• Nov 22 2024

மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - இருவருக்கு பிடியாணை!

Chithra / Mar 20th 2024, 12:03 pm
image


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க வருகைதந்தபோது மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்கு கலந்துகொள்ளாத இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி தர்சினி முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் நீதிமன்ற நீதிபதியின் கட்டளை நீதிபதியினால் வாசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த வழக்கானது தொடர்ந்து முன்கொண்டுசெல்ல முடியும் என்ற அடிப்படையில்  வழக்கானது எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - இருவருக்கு பிடியாணை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க வருகைதந்தபோது மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்கு கலந்துகொள்ளாத இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி தர்சினி முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் நீதிமன்ற நீதிபதியின் கட்டளை நீதிபதியினால் வாசிக்கப்பட்டது.அதனடிப்படையில் குறித்த வழக்கானது தொடர்ந்து முன்கொண்டுசெல்ல முடியும் என்ற அடிப்படையில்  வழக்கானது எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement