• Feb 27 2026

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்!

shanuja / Feb 3rd 2026, 3:08 pm
image

 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை(4) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.


பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் நாளைய தினம் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.


இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்  78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை(4) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் நாளைய தினம் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement