உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியாகியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை பலத்தை எம்மால் கைப்பற்ற முடியுமாக இருக்கும்.
பொய்யுரைத்து ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் தொடர்பில் கடந்த ஆறு மாத காலத்தில் மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.
அதேபோன்று கீழ் மட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக மாறியுள்ளனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே, நாட்டின் நிலை தொடர்பில் கீழ் மட்ட மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்குமாறு அனைத்து வேட்பாளர்களுக்கும் எடுத்துரைத்துள்ளோம்.
அதற்கமைய தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அந்த வகையில் எம்முடைய வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எங்கள் வெற்றி உறுதி: சஜித் தரப்பு நம்பிக்கை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியாகியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை பலத்தை எம்மால் கைப்பற்ற முடியுமாக இருக்கும். பொய்யுரைத்து ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் தொடர்பில் கடந்த ஆறு மாத காலத்தில் மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.அதேபோன்று கீழ் மட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக மாறியுள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.ஆகவே, நாட்டின் நிலை தொடர்பில் கீழ் மட்ட மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்குமாறு அனைத்து வேட்பாளர்களுக்கும் எடுத்துரைத்துள்ளோம். அதற்கமைய தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அந்த வகையில் எம்முடைய வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.