• Apr 16 2026

கிண்ணியாவில் போக்குவரத்து விதிகளை மீறிய 25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்

Chithra / Mar 2nd 2026, 2:54 pm
image


திருகோணமலை -  கிண்ணியா நகரப் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் இன்று விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


தற்போது புனித ரமலான் காலம் என்பதால், கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 


போதிய அகலமின்மை காரணமாக இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது. இதனைச் சீர்செய்யும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


குறிப்பாக, பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள "ஒற்றை நாள் - இரட்டை நாள்" (Odd - Even Day Parking) முறையைச் சரியாகப் பின்பற்றாத சாரதிகள் மீது இதன்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இவ் நடவடிக்கையினால் கிண்ணியா நகரின் போக்குவரத்து நிலைமை இன்று ஓரளவுக்குச் சீராகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கிண்ணியாவில் போக்குவரத்து விதிகளை மீறிய 25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் திருகோணமலை -  கிண்ணியா நகரப் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் இன்று விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.தற்போது புனித ரமலான் காலம் என்பதால், கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. போதிய அகலமின்மை காரணமாக இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது. இதனைச் சீர்செய்யும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.குறிப்பாக, பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள "ஒற்றை நாள் - இரட்டை நாள்" (Odd - Even Day Parking) முறையைச் சரியாகப் பின்பற்றாத சாரதிகள் மீது இதன்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ் நடவடிக்கையினால் கிண்ணியா நகரின் போக்குவரத்து நிலைமை இன்று ஓரளவுக்குச் சீராகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement