• Feb 07 2026

கிளிநொச்சி களஞ்சிய சாலைகளில் சுழற்சி முறையில் நெல் கொள்வனவு!

dileesiya / Feb 5th 2026, 3:46 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025/2026ம்  ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்வனவானது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற களஞ்சிய சாலைகளில் தற்பொழுது சுழற்சி முறையில் கொள்வனவு நடைபெற்று வருவதாக வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை பதில்  முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்


கடந்த 26 ஆம் திகதிதொடக்கம்  நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


 தற்போது விவசாயிகள் தங்களது நெல்களை  நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளுக்கு   தமது நெல்லினைகொண்டுவந்து வழங்கி வருகின்றனர். 


நாடு ஒரு கிலோ கிராம் 120 ஆகவும் சம்பா ஒரு கிலோ கிராம் 130 ஒரு கிலோ கீரிச்சம்பா ஒரு  கிராம் 140க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் நான்கு களஞ்சியசலைகள்  திறக்கப்பட்டுள்ளது. 


இராமநாதபுரம் புளியம்பொக்கனை,கண்டாவளை ,முழங்காவில் போன்ற களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளது .


இது ஒரு கிழமையில் இரண்டு நாட்களுக்கு சுழற்சி முறையில் திறக்கப்படும் எனவும்  எந்தெந்த களஞ்சிய சாலைகளில் எப்போது வழங்க முடியும் என்பதனை

பிராந்திய காரியத்தில் 021 20 60 913 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு நெல்லினை விவசாயிகள் வழங்கக் கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி களஞ்சிய சாலைகளில் சுழற்சி முறையில் நெல் கொள்வனவு கிளிநொச்சி மாவட்டத்தின் 2025/2026ம்  ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்வனவானது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற களஞ்சிய சாலைகளில் தற்பொழுது சுழற்சி முறையில் கொள்வனவு நடைபெற்று வருவதாக வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை பதில்  முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்கடந்த 26 ஆம் திகதிதொடக்கம்  நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது விவசாயிகள் தங்களது நெல்களை  நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளுக்கு   தமது நெல்லினைகொண்டுவந்து வழங்கி வருகின்றனர். நாடு ஒரு கிலோ கிராம் 120 ஆகவும் சம்பா ஒரு கிலோ கிராம் 130 ஒரு கிலோ கீரிச்சம்பா ஒரு  கிராம் 140க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் நான்கு களஞ்சியசலைகள்  திறக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் புளியம்பொக்கனை,கண்டாவளை ,முழங்காவில் போன்ற களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளது .இது ஒரு கிழமையில் இரண்டு நாட்களுக்கு சுழற்சி முறையில் திறக்கப்படும் எனவும்  எந்தெந்த களஞ்சிய சாலைகளில் எப்போது வழங்க முடியும் என்பதனைபிராந்திய காரியத்தில் 021 20 60 913 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு நெல்லினை விவசாயிகள் வழங்கக் கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement