• Apr 15 2026

வலி. வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் - அமைச்சர் சந்திரசேகரன் உறுதி!

Chithra / Feb 15th 2026, 12:25 pm
image


வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 


நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வடமாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 


யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம்.


வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு  அமைய பாதுகாப்பு அமைச்சு  மேற்கொண்டு வருகிறது.


வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக  யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட வருகின்ற நிலையில், வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு  இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஎன அவர் மேலும் தெரிவித்தார்.


வலி. வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் - அமைச்சர் சந்திரசேகரன் உறுதி வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வடமாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம்.வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு  அமைய பாதுகாப்பு அமைச்சு  மேற்கொண்டு வருகிறது.வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக  யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட வருகின்ற நிலையில், வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு  இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஎன அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement