• Aug 22 2026

பண்டத்தரிப்பு ஆலய சர்ச்சை; தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடவும்! மின் விளக்குகளை கைப்பற்றிய பொலிஸ்

Chithra / Aug 21st 2026, 3:46 pm
image


யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால்   157 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இதுதொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்


குறித்த பகுதியில் நடைபெற்ற திருவிழாவின்போது அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


பாதிக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான விசேட வசதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 மேலதிக படுக்கைகளுடன் குறுகியகால தங்குமிடப் பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன.


தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதுடன், நோயாளிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மாலை அல்லது இரவு வீடு திரும்பக்கூடிய நிலையில் இருப்பார்கள்.


எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. கண் வலி, எரிச்சல், அதிக கண்ணீர் வடிதல், பார்வையில் மாற்றம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதமின்றி வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


நிலைமை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், மேலதிகமாக வரக்கூடிய நோயாளர்களுக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.


இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம். மலரவன், கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக, திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், கண்களைத் தேய்க்க வேண்டாம் எனவும், சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் வைத்திய நிபுணர் எச்சரித்துள்ளார்.


கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு டாக்டர் எம். மலரவன் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் நேற்றைய ஆலயத் திருவிழாவின்போது நூற்றுக் கணக்காணோரின் கண் பாதிப்பிற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


இதன்போது ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த (லைற்) மின் விளக்குகளில் அதிக சக்தி கொண்டவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.


பொரிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்படுவதோடு இவை பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டனவா எனவும் ஆராயப்படுகின்றது.


பண்டத்தரிப்பு ஆலய சர்ச்சை; தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடவும் மின் விளக்குகளை கைப்பற்றிய பொலிஸ் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால்   157 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்குறித்த பகுதியில் நடைபெற்ற திருவிழாவின்போது அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான விசேட வசதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 மேலதிக படுக்கைகளுடன் குறுகியகால தங்குமிடப் பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன.தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதுடன், நோயாளிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மாலை அல்லது இரவு வீடு திரும்பக்கூடிய நிலையில் இருப்பார்கள்.எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. கண் வலி, எரிச்சல், அதிக கண்ணீர் வடிதல், பார்வையில் மாற்றம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதமின்றி வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.நிலைமை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், மேலதிகமாக வரக்கூடிய நோயாளர்களுக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம். மலரவன், கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கண்களைத் தேய்க்க வேண்டாம் எனவும், சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் வைத்திய நிபுணர் எச்சரித்துள்ளார்.கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு டாக்டர் எம். மலரவன் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் நேற்றைய ஆலயத் திருவிழாவின்போது நூற்றுக் கணக்காணோரின் கண் பாதிப்பிற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.இதன்போது ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த (லைற்) மின் விளக்குகளில் அதிக சக்தி கொண்டவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.பொரிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்படுவதோடு இவை பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டனவா எனவும் ஆராயப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement