• Nov 23 2024

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை விழா!

Tamil nila / Aug 26th 2024, 7:55 pm
image

குமரபுரம் பகுதியில் பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை சிறப்பாக நடைபெற்றது. 

இயந்திர நாற்று  நடுகை மற்றும் பரசூட் முறை மூலமான  நடுகை இரண்டையும் தனது வயலில் விவசாயத் திணைக்களம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் ,கமல சேவை திணைக்களம், என்பனவற்றுடன் இணைந்து திறம்பட செய்கை செய்த முன்னோடி விவசாயி குணாவின் வயலில் மேற்படி அறுவடை விழா இடம் பெற்றது 

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி, மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் பா.தேவரதன் ,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட, வருகை   விரிவுரையாளர் மகேஸ்வரன் ரஜீதன் ,உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள்,  விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


விசேடமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பயிரியல் மாணவர்கள் இருவரின் ஆராய்ச்சி வயலாக மேற்படி வயல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை விழா குமரபுரம் பகுதியில் பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை சிறப்பாக நடைபெற்றது. இயந்திர நாற்று  நடுகை மற்றும் பரசூட் முறை மூலமான  நடுகை இரண்டையும் தனது வயலில் விவசாயத் திணைக்களம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் ,கமல சேவை திணைக்களம், என்பனவற்றுடன் இணைந்து திறம்பட செய்கை செய்த முன்னோடி விவசாயி குணாவின் வயலில் மேற்படி அறுவடை விழா இடம் பெற்றது குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி, மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் பா.தேவரதன் ,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட, வருகை   விரிவுரையாளர் மகேஸ்வரன் ரஜீதன் ,உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள்,  விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.விசேடமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பயிரியல் மாணவர்கள் இருவரின் ஆராய்ச்சி வயலாக மேற்படி வயல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement