• Nov 25 2024

பெற்றோர்களே அவதானம்! குழந்தைகள் தொடர்பில் மருத்துவரின் அவசர எச்சரிக்கை..!

Chithra / Dec 29th 2023, 8:55 am
image


சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் தொற்றுகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி போன்ற நோய்கள், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .

மழையுடன் கூடிய காலநிலை மற்றும் சனக்கூட்டங்கள் காரணமாக, சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை காரணமாக வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாடசாலை விடுமுறையில்  குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் குழந்தைகள், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை அதிகரித்துள்ளன என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவங்களை அணியுமாறும் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை  கொழும்பில் தற்போதைக்கு கோவிட் 19 தொற்று அல்லது வேறு எந்த தொற்று பரவுகையும் கிடையாது என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

எனினும் நோய்த்தொற்றுகள் பரவுவதினை தடுப்பதற்கு மக்கள் போதியளவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று பரவுகை அபாயங்களை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது. 

பெற்றோர்களே அவதானம் குழந்தைகள் தொடர்பில் மருத்துவரின் அவசர எச்சரிக்கை. சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் தொற்றுகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி போன்ற நோய்கள், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .மழையுடன் கூடிய காலநிலை மற்றும் சனக்கூட்டங்கள் காரணமாக, சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பாடசாலை விடுமுறை காரணமாக வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பாடசாலை விடுமுறையில்  குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் குழந்தைகள், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை அதிகரித்துள்ளன என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவங்களை அணியுமாறும் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.இதேவேளை  கொழும்பில் தற்போதைக்கு கோவிட் 19 தொற்று அல்லது வேறு எந்த தொற்று பரவுகையும் கிடையாது என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.எனினும் நோய்த்தொற்றுகள் பரவுவதினை தடுப்பதற்கு மக்கள் போதியளவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று பரவுகை அபாயங்களை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement