• Dec 04 2024

பாராளுமன்றம் இன்று கூடுகிறது; ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் குறித்து விவாதம்..!

Sharmi / Dec 3rd 2024, 9:15 am
image

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்று(03) மற்றும் நாளையதினமும்(04) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாராளுமன்றமானது இன்று(03) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது. 

இந்தநிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்றைய தினம்(03)  நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, நாளைய தினமும் கொள்கை பிரகடனம் தொடர்பான பிரேரணை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது; ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் குறித்து விவாதம். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்று(03) மற்றும் நாளையதினமும்(04) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாராளுமன்றமானது இன்று(03) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்தநிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்றைய தினம்(03)  நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.அதேவேளை, நாளைய தினமும் கொள்கை பிரகடனம் தொடர்பான பிரேரணை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement