• Apr 13 2025

அமெரிக்காவின் புதிய வரி முறைமை குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

Thansita / Apr 10th 2025, 5:43 pm
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய  வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

அந்த வகையில்; அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது தொடர்பாகவும் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும்  ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்றது.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையை விடத்துள்ளது அதற்கேற்ப  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த விடயங்களை ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு  முன்வைத்துள்ள முன்மொழிவுகள் போன்றவற்றை ஒன்றிணைத்து கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து ஆராயவும் முடிவுகள் எடுக்கப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியை  பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் எஸ். ராசமாணிக்கம், புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாத் பதியுதீன், சர்வஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர,  ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர,  சுயோட்சைக் குழு 17 சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அர்ச்சுன ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார், காதர் மஸ்தான் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் புதிய வரி முறைமை குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய  வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.அந்த வகையில்; அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது தொடர்பாகவும் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும்  ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்றது.அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையை விடத்துள்ளது அதற்கேற்ப  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த விடயங்களை ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு  முன்வைத்துள்ள முன்மொழிவுகள் போன்றவற்றை ஒன்றிணைத்து கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து ஆராயவும் முடிவுகள் எடுக்கப்பட்டதுஐக்கிய மக்கள் சக்தியை  பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் எஸ். ராசமாணிக்கம், புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாத் பதியுதீன், சர்வஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர,  ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர,  சுயோட்சைக் குழு 17 சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அர்ச்சுன ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார், காதர் மஸ்தான் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement