பதுளை - ஸ்பிரிங்வெலி வீதியில் சேதமடைந்துள்ள பாலத்துக்கு பதிலாக புதிய பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக சேதமடைந்த ஸ்பிரிங்வெலி பகுதிக்குச் செல்லும் பாலத்துக்கு பதிலாக மாற்று பாலமாக பெய்லி பாலம் கட்டும் பணிகளே இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதி, அந்தப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் ஸ்பிரிங்வெளி, மேமலை, நல்லமலை, புதுமலை மற்றும் வெலல்ஹின்ன ஆகிய பெருந்தோட்ட பகுதிகளுக்கான போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாகவும் அமைந்துள்ளது.
எனினும், பேரிடரால் குறித்த பாலம் சேதமடைந்ததால், அந்த பாலத்தின் ஊடான பொது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், அந்த பாலத்துக்கு மாற்றாக நிர்மாணிக்கப்படும் பெய்லி பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை - ஸ்பிரிங்வெலி வீதி பெய்லி பாலம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் பதுளை - ஸ்பிரிங்வெலி வீதியில் சேதமடைந்துள்ள பாலத்துக்கு பதிலாக புதிய பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டில் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக சேதமடைந்த ஸ்பிரிங்வெலி பகுதிக்குச் செல்லும் பாலத்துக்கு பதிலாக மாற்று பாலமாக பெய்லி பாலம் கட்டும் பணிகளே இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதி, அந்தப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் ஸ்பிரிங்வெளி, மேமலை, நல்லமலை, புதுமலை மற்றும் வெலல்ஹின்ன ஆகிய பெருந்தோட்ட பகுதிகளுக்கான போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாகவும் அமைந்துள்ளது. எனினும், பேரிடரால் குறித்த பாலம் சேதமடைந்ததால், அந்த பாலத்தின் ஊடான பொது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், அந்த பாலத்துக்கு மாற்றாக நிர்மாணிக்கப்படும் பெய்லி பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.