சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசிய கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன.
நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக மூவின மாணவர்கள், இளைஞர், யுவதிகள் ஊர்வலமாக மாநகரசபை மைதானத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மூவின மாணவர்களும் இணைந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அதனை தொடர்ந்து சாமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
அத்துடன் கலந்து கொண்ட மூவின மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், மதகுருமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வானில் பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்கள்-வவுனியாவில் சுகந்திர தின கொண்டாட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசிய கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன.நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.முன்னதாக மூவின மாணவர்கள், இளைஞர், யுவதிகள் ஊர்வலமாக மாநகரசபை மைதானத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மூவின மாணவர்களும் இணைந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.அதனை தொடர்ந்து சாமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன.அத்துடன் கலந்து கொண்ட மூவின மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், மதகுருமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.