தென்கிழக்குப் பல்கலைக்கழகம் "பல்கலைக் கழகமாக" 1996.05.15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு 2026.05.15ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
“Pearl Jubilee Anniversary” எனப் பெயரிடப்பட்ட இம்முத்து விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் முப்பது ஆண்டுகால பணிச்சேவையையும் நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வு ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான எஸ்.ஏ.சி.எம். ஜுனைடீன் நெறிப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஸ்தாபக ஊழியர்கள் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். மிகுந்த சிநேகபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஆரம்பகாலங்களில் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட சவால்கள், குறைந்த வளங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சேவைகள், மாணவர் மையப்படுத்தப்பட்ட பணியியல் அனுபவங்கள் மற்றும் பல்கலைக்கழக வளர்ச்சியின் மறக்கமுடியாத நினைவுகள் ஆகியவை ஸ்தாபக ஊழியர்களால் பகிரப்பட்டன.
உபவேந்தர் உரையாற்றுகையில், முப்பது ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஸ்தாபக ஊழியர்களின் சேவையை பாராட்டியதுடன், அவர்கள் உருவாக்கிய ஒழுக்கம், பணிப்பண்பாடு மற்றும் நிறுவன கலாசாரமே இன்று பல்கலைக்கழகத்தின் அடித்தள வலிமையாக திகழ்கின்றது எனக் குறிப்பிட்டார். மேலும், எதிர்கால தலைமுறைகளுக்காக பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஸ்தாபக ஊழியர்களின் அனுபவங்கள் புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்தாபக ஊழியர்களுக்கும் தற்போதைய உபவேந்தருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, கடந்த கால அர்ப்பணிப்புகளையும் எதிர்கால முன்னேற்றக் கனவுகளையும் இணைக்கும் அர்த்தமுள்ள தருணமாக அமைந்திருந்தது. பழைய நினைவுகளை மீட்டெடுத்த இச்சந்திப்பு, பல ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரே குடும்ப உணர்வோடு அனைவரையும் ஒன்றிணைத்த உணர்வுபூர்வமான நிகழ்வாகக் காணப்பட்டது.
நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உரையாற்றுகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முப்பது ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தில் (founder members) ஸ்தாபக ஊழியர்களின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் தியாக மனப்பான்மை முக்கியமான பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒரு கல்வி நிறுவனம் என்பது கட்டிடங்களாலும் ஆவணங்களாலும் மட்டும் உயிர்ப்படுவதில்லை; அதில் பணியாற்றும் ஊழியர்களே அதன் உண்மையான பலம்” என வலியுறுத்தினார். பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ஸ்தாபக ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பின்னணியில் இருந்து ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கவை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் விலகிச் சென்ற முன்னாள் ஊழியர்கள் தொடர்ந்தும் உரிமையோடு இணைந்திருக்கும் வகையில் விசேட அமைப்பு ஒன்றை உருவாக்கும் யோசனையை அவர் வரவேற்றதுடன், தானும் அதனை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். அத்துடன், முப்பது ஆண்டுகள் சேவையாற்றிய ஸ்தாபக ஊழியர்களை எதிர்வரும் Founder’s Day நிகழ்வில் விசேடமாக கௌரவிக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின் தலைமை உரையாற்றிய ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் அவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகள் சேவையாற்றும் வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்தார். கல்வி கற்பிக்கும் நிறுவனத்தில் நேரடியாக ஆசிரியர்களாக இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்கும் துணையாக சேவையாற்றுவது மிகப்பெரிய அருளாகும் என்றும், அதன் நன்மைகளும் பரகத்துகளும் அளவற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சிநிலையைப் பார்க்கும்போது தங்களுக்கும் அதில் ஒரு சிறிய பங்களிப்பு இருப்பது பெருமையளிப்பதாகவும், அந்தச் சேவைகளை இறைவன் நற்கூலியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்தார். வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆரம்பகால ஊழியர்களை பல்கலைக்கழகம் ஒன்றிணைத்து ஒரு குடும்பமாக மாற்றியமைத்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், அவரது கப்ருடைய வாழ்வை அல்லாஹ் வெளிச்சமாகவும் விசாலமாகவும் ஆக்க வேண்டும் என வேண்டினார். அத்துடன் அந்நாளைய உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் மற்றும் ஜௌபர் சாதிக் உள்ளிட்ட நிர்வாகத்தினரும், அக்கால பேரவை உறுப்பினர்களும் நேர்மையுடனும் தூய எண்ணத்துடனும் செயல்பட்டதாலேயே பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது எனவும் நினைவுகூர்ந்தார்.
தாங்கள் பணியில் இணைந்த காலத்தில் அரசியல் ஆதரவோ செல்வாக்கோ இன்றி நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்காக அக்கால நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களின் முயற்சிகளே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் பாராட்டினார். இறுதியாக, கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தை வழிநடத்திய அனைத்து உபவேந்தர்கள், பதிவாளர்கள், நிதியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இறைவனின் அருளும் நற்கூலியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்து தனது உரையை நிறைவு செய்தார்.
இதே நிகழ்வில் உரையாற்றிய ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான எம்.எச்.எம். ஹலீம் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணியில் இணைந்தபோதைய உணர்வுகள் இன்னும் மனதில் நிலைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த ஒன்றுகூடல் ஒரு சாதாரண சந்திப்பாக இல்லாமல், எதிர்கால தலைமுறைகளையும் இணைக்கும் குடும்ப உறவாக வளர வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கடந்தகால மனிதநேய முயற்சிகளை நினைவுகூர்ந்த அவர், சேவைக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் பெற்றுத் தரப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்ட வரலாறு தமக்கு முன்மாதிரியாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மறைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவியளிக்கும் மரபு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பல்கலைக்கழகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு உரிய முக்கியத்துவத்துடன் நினைவுகூரப்படாதது குறித்து அவர் கவலை வெளியிட்டதுடன், பல்கலைக்கழகத்தின் வரலாறும் உருவாக்கப் பயணமும் எதிர்கால தலைமுறைகளுக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆரம்பகால ஊழியர்கள், பின்னர் இணைந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் வலுவான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார்.
“இந்தப் பல்கலைக்கழகம் ஒரு சாதாரண நிறுவனம் அல்ல; பல்கலைக்கழக கல்லூரியாக இருந்து பல்கலைக்கழகமாக உயர்ந்த வரலாற்றுப் பயணத்தின் அடையாளம்” எனக் குறிப்பிட்ட அவர், அந்தப் பயணத்தில் உழைத்தவர்களின் பங்களிப்புகள் உரிய முறையில் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தை வழிநடத்திய அனைத்து உபவேந்தர்கள், பதிவாளர்கள், நிதியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இறைவனின் அருளும் நற்கூலியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்து உரைகள் நிறைவடைந்தன.
நிகழ்வின் இறுதியில் ஸ்தாபக ஊழியர்கள் தங்களது ஆரம்பகால சேவை அனுபவங்கள், பல்கலைக்கழக வளர்ச்சியின் நினைவுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், ஒன்றிணைந்த மதிய உணவு நிகழ்வும் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக ஊழியர்களின் முத்து விழா ஒன்றுகூடல் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் "பல்கலைக் கழகமாக" 1996.05.15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு 2026.05.15ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. “Pearl Jubilee Anniversary” எனப் பெயரிடப்பட்ட இம்முத்து விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் முப்பது ஆண்டுகால பணிச்சேவையையும் நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிகழ்வு ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான எஸ்.ஏ.சி.எம். ஜுனைடீன் நெறிப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஸ்தாபக ஊழியர்கள் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். மிகுந்த சிநேகபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஆரம்பகாலங்களில் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட சவால்கள், குறைந்த வளங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சேவைகள், மாணவர் மையப்படுத்தப்பட்ட பணியியல் அனுபவங்கள் மற்றும் பல்கலைக்கழக வளர்ச்சியின் மறக்கமுடியாத நினைவுகள் ஆகியவை ஸ்தாபக ஊழியர்களால் பகிரப்பட்டன.உபவேந்தர் உரையாற்றுகையில், முப்பது ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஸ்தாபக ஊழியர்களின் சேவையை பாராட்டியதுடன், அவர்கள் உருவாக்கிய ஒழுக்கம், பணிப்பண்பாடு மற்றும் நிறுவன கலாசாரமே இன்று பல்கலைக்கழகத்தின் அடித்தள வலிமையாக திகழ்கின்றது எனக் குறிப்பிட்டார். மேலும், எதிர்கால தலைமுறைகளுக்காக பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஸ்தாபக ஊழியர்களின் அனுபவங்கள் புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், ஸ்தாபக ஊழியர்களுக்கும் தற்போதைய உபவேந்தருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, கடந்த கால அர்ப்பணிப்புகளையும் எதிர்கால முன்னேற்றக் கனவுகளையும் இணைக்கும் அர்த்தமுள்ள தருணமாக அமைந்திருந்தது. பழைய நினைவுகளை மீட்டெடுத்த இச்சந்திப்பு, பல ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரே குடும்ப உணர்வோடு அனைவரையும் ஒன்றிணைத்த உணர்வுபூர்வமான நிகழ்வாகக் காணப்பட்டது.நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உரையாற்றுகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முப்பது ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தில் (founder members) ஸ்தாபக ஊழியர்களின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் தியாக மனப்பான்மை முக்கியமான பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், “ஒரு கல்வி நிறுவனம் என்பது கட்டிடங்களாலும் ஆவணங்களாலும் மட்டும் உயிர்ப்படுவதில்லை; அதில் பணியாற்றும் ஊழியர்களே அதன் உண்மையான பலம்” என வலியுறுத்தினார். பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ஸ்தாபக ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பின்னணியில் இருந்து ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கவை எனவும் அவர் தெரிவித்தார்.மேலும், பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் விலகிச் சென்ற முன்னாள் ஊழியர்கள் தொடர்ந்தும் உரிமையோடு இணைந்திருக்கும் வகையில் விசேட அமைப்பு ஒன்றை உருவாக்கும் யோசனையை அவர் வரவேற்றதுடன், தானும் அதனை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். அத்துடன், முப்பது ஆண்டுகள் சேவையாற்றிய ஸ்தாபக ஊழியர்களை எதிர்வரும் Founder’s Day நிகழ்வில் விசேடமாக கௌரவிக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.நிகழ்வின் தலைமை உரையாற்றிய ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் அவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகள் சேவையாற்றும் வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்தார். கல்வி கற்பிக்கும் நிறுவனத்தில் நேரடியாக ஆசிரியர்களாக இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்கும் துணையாக சேவையாற்றுவது மிகப்பெரிய அருளாகும் என்றும், அதன் நன்மைகளும் பரகத்துகளும் அளவற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சிநிலையைப் பார்க்கும்போது தங்களுக்கும் அதில் ஒரு சிறிய பங்களிப்பு இருப்பது பெருமையளிப்பதாகவும், அந்தச் சேவைகளை இறைவன் நற்கூலியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்தார். வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆரம்பகால ஊழியர்களை பல்கலைக்கழகம் ஒன்றிணைத்து ஒரு குடும்பமாக மாற்றியமைத்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், அவரது கப்ருடைய வாழ்வை அல்லாஹ் வெளிச்சமாகவும் விசாலமாகவும் ஆக்க வேண்டும் என வேண்டினார். அத்துடன் அந்நாளைய உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் மற்றும் ஜௌபர் சாதிக் உள்ளிட்ட நிர்வாகத்தினரும், அக்கால பேரவை உறுப்பினர்களும் நேர்மையுடனும் தூய எண்ணத்துடனும் செயல்பட்டதாலேயே பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது எனவும் நினைவுகூர்ந்தார்.தாங்கள் பணியில் இணைந்த காலத்தில் அரசியல் ஆதரவோ செல்வாக்கோ இன்றி நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்காக அக்கால நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களின் முயற்சிகளே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் பாராட்டினார். இறுதியாக, கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தை வழிநடத்திய அனைத்து உபவேந்தர்கள், பதிவாளர்கள், நிதியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இறைவனின் அருளும் நற்கூலியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்து தனது உரையை நிறைவு செய்தார்.இதே நிகழ்வில் உரையாற்றிய ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான எம்.எச்.எம். ஹலீம் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணியில் இணைந்தபோதைய உணர்வுகள் இன்னும் மனதில் நிலைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த ஒன்றுகூடல் ஒரு சாதாரண சந்திப்பாக இல்லாமல், எதிர்கால தலைமுறைகளையும் இணைக்கும் குடும்ப உறவாக வளர வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.மேலும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கடந்தகால மனிதநேய முயற்சிகளை நினைவுகூர்ந்த அவர், சேவைக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் பெற்றுத் தரப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்ட வரலாறு தமக்கு முன்மாதிரியாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மறைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவியளிக்கும் மரபு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.அத்துடன், பல்கலைக்கழகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு உரிய முக்கியத்துவத்துடன் நினைவுகூரப்படாதது குறித்து அவர் கவலை வெளியிட்டதுடன், பல்கலைக்கழகத்தின் வரலாறும் உருவாக்கப் பயணமும் எதிர்கால தலைமுறைகளுக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆரம்பகால ஊழியர்கள், பின்னர் இணைந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் வலுவான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார்.“இந்தப் பல்கலைக்கழகம் ஒரு சாதாரண நிறுவனம் அல்ல; பல்கலைக்கழக கல்லூரியாக இருந்து பல்கலைக்கழகமாக உயர்ந்த வரலாற்றுப் பயணத்தின் அடையாளம்” எனக் குறிப்பிட்ட அவர், அந்தப் பயணத்தில் உழைத்தவர்களின் பங்களிப்புகள் உரிய முறையில் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.இறுதியாக, கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தை வழிநடத்திய அனைத்து உபவேந்தர்கள், பதிவாளர்கள், நிதியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இறைவனின் அருளும் நற்கூலியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்து உரைகள் நிறைவடைந்தன.நிகழ்வின் இறுதியில் ஸ்தாபக ஊழியர்கள் தங்களது ஆரம்பகால சேவை அனுபவங்கள், பல்கலைக்கழக வளர்ச்சியின் நினைவுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், ஒன்றிணைந்த மதிய உணவு நிகழ்வும் இடம்பெற்றது.