• Mar 16 2026

வீதியில் பயணித்த பாதசாரி விபத்தில் சிக்கி பரிதாப மரணம்..!

Ziya / Nov 5th 2024, 4:35 pm
image

கம்பஹா, நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று(04) இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துநரும், பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுங்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் பயணித்த பாதசாரி விபத்தில் சிக்கி பரிதாப மரணம். கம்பஹா, நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று(04) இரவு இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துநரும், பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுங்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement