• Nov 22 2024

வரி இலக்கம் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் - முடிவில் மாற்றம்..!samugammedia

mathuri / Jan 3rd 2024, 8:45 pm
image

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. “நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதனால் நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை.

வரி இலக்கம் கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







வரி இலக்கம் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் - முடிவில் மாற்றம்.samugammedia வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. “நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதனால் நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை. வரி இலக்கம் கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement