நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று திங்கட்கிழமை (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.
எனினும் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,
வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாரும் செயற்படவில்லை எனவும்,
நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று திங்கட்கிழமை (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.எனினும் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாரும் செயற்படவில்லை எனவும்,நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.