• Sep 21 2024

மக்களே காலையிலேயே சென்று வாக்களியுங்கள் வாக்களிக்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள்- மனோ கணேசன் எம்.பி. அறிவுறுத்து!

Tamil nila / Sep 21st 2024, 6:43 am
image

Advertisement

"தாமதமின்றி இன்று காலையிலேயே சென்று வாக்களியுங்கள். உணர்சிகளுக்கு இடம் தாராமல், நிதானமாக சிந்தித்து, தீர்மானித்த சின்னத்துக்குத் தைரியமாகச் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் ஒருபோதும் இருந்து விடாதீர்கள்."

- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

"இன்று நடைபெறப்போவது முழு நாட்டுக்குமான ஜனாதிபதித் தேர்தல். தேர்தல் சட்டப்படி வெற்றி பெற வேண்டிய வேட்பாளர், முதல் சுற்றில் 50 சத விகிதமும், அதனுடன் மேலதிகமாகக் குறைந்த பட்சம் ஒரு வாக்கும் பெற வேண்டும். ஆகவே, ஒவ்வொரு வாக்கும் இங்கே முக்கியமாகின்றது.

இது ஜனாதிபதித் தேர்தல் என்பதால், முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியாகின்றது. வாக்குகள் எண்ணப்படுவது, அறிவிக்கப்படுவது மாவட்ட, தொகுதி மட்டங்களாக இருந்தாலும், இங்கே முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதி.

ஆகவே, தாமதமின்றி இன்று காலையிலேயே சென்று வாக்களியுங்கள். உணர்சிகளுக்கு இடம் தாராமல், நிதானமாக சிந்தித்து, தீர்மானித்த சின்னத்துக்குத் தைரியமாகச் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் ஒருபோதும் இருந்து விடாதீர்கள்." - என்றுள்ளது.  


மக்களே காலையிலேயே சென்று வாக்களியுங்கள் வாக்களிக்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள்- மனோ கணேசன் எம்.பி. அறிவுறுத்து "தாமதமின்றி இன்று காலையிலேயே சென்று வாக்களியுங்கள். உணர்சிகளுக்கு இடம் தாராமல், நிதானமாக சிந்தித்து, தீர்மானித்த சின்னத்துக்குத் தைரியமாகச் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் ஒருபோதும் இருந்து விடாதீர்கள்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., மக்களை அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,"இன்று நடைபெறப்போவது முழு நாட்டுக்குமான ஜனாதிபதித் தேர்தல். தேர்தல் சட்டப்படி வெற்றி பெற வேண்டிய வேட்பாளர், முதல் சுற்றில் 50 சத விகிதமும், அதனுடன் மேலதிகமாகக் குறைந்த பட்சம் ஒரு வாக்கும் பெற வேண்டும். ஆகவே, ஒவ்வொரு வாக்கும் இங்கே முக்கியமாகின்றது.இது ஜனாதிபதித் தேர்தல் என்பதால், முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியாகின்றது. வாக்குகள் எண்ணப்படுவது, அறிவிக்கப்படுவது மாவட்ட, தொகுதி மட்டங்களாக இருந்தாலும், இங்கே முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதி.ஆகவே, தாமதமின்றி இன்று காலையிலேயே சென்று வாக்களியுங்கள். உணர்சிகளுக்கு இடம் தாராமல், நிதானமாக சிந்தித்து, தீர்மானித்த சின்னத்துக்குத் தைரியமாகச் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மாத்திரம் ஒருபோதும் இருந்து விடாதீர்கள்." - என்றுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement