• Aug 03 2026

வயாவிளான் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Chithra / Aug 2nd 2026, 12:26 pm
image


தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை மீள விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


வசாவிளான் சந்தியில் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


சுமார் 40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பினால் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய மக்கள், தமது வலிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


“அரசே! எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள், கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே மீள வழங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.


பெருமளவான மக்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.


இதன்போது, “விவசாய நிலங்கள் பேசட்டும், சிதைந்து கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும் நாம் வாழ்ந்த வரலாற்றை சாட்சியமாக கூறட்டும். எமது நிலங்கள் எமக்கு மீள கிடைக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.


கடந்த காலங்களில் விடுவிப்பதாக இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


மேலும், இந்த போராட்டம் எவருக்கும் எதிரானது அல்ல எனவும், தமது உரிமையான நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைக்கும் நடவடிக்கை எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.


வயாவிளான் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை மீள விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.வசாவிளான் சந்தியில் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.சுமார் 40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பினால் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய மக்கள், தமது வலிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.“அரசே எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள், கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே மீள வழங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.பெருமளவான மக்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.இதன்போது, “விவசாய நிலங்கள் பேசட்டும், சிதைந்து கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும் நாம் வாழ்ந்த வரலாற்றை சாட்சியமாக கூறட்டும். எமது நிலங்கள் எமக்கு மீள கிடைக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.கடந்த காலங்களில் விடுவிப்பதாக இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும், இந்த போராட்டம் எவருக்கும் எதிரானது அல்ல எனவும், தமது உரிமையான நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைக்கும் நடவடிக்கை எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement