• Mar 01 2025

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி வீதிக்கிறங்கிய வெருகல் மக்கள்

Chithra / Mar 1st 2025, 12:18 pm
image


வெருகல் முகத்துவாரம் - சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 400 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதியானது பள்ளமும், குழியுமாக காணப்படுவதோடு இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரிகளுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்,

அரசே! நகரப்புற வீதிகளை போன்று கிராமப்புற வீதிகளையும் புனரமைத்துத் தா, அரசியல்வாதிகளே இந்த வீதி உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?, அரசே இந்த வீதியை உடனடியாக புனரமைத்துத்தா உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியமாறு கோஷங்களை எழுப்பி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் வீதி புனரமைப்புத் தொடர்பாக அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை இந்த வீதியானது புனரமைப்பு செய்யப்படவில்லை என வெருகல் முகத்துவாரம் - சூரநகர் கிராம மக்கள் விசனம் தெரிவித்தனர்.   


வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி வீதிக்கிறங்கிய வெருகல் மக்கள் வெருகல் முகத்துவாரம் - சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 400 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதியானது பள்ளமும், குழியுமாக காணப்படுவதோடு இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரிகளுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.இந்நிலையிலேயே இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்,அரசே நகரப்புற வீதிகளை போன்று கிராமப்புற வீதிகளையும் புனரமைத்துத் தா, அரசியல்வாதிகளே இந்த வீதி உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா, அரசே இந்த வீதியை உடனடியாக புனரமைத்துத்தா உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியமாறு கோஷங்களை எழுப்பி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவ் வீதி புனரமைப்புத் தொடர்பாக அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை இந்த வீதியானது புனரமைப்பு செய்யப்படவில்லை என வெருகல் முகத்துவாரம் - சூரநகர் கிராம மக்கள் விசனம் தெரிவித்தனர்.   

Advertisement

Advertisement

Advertisement