யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை.
1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன். அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை. சட்டக்கல்வி வாய்ப்பு யாழ். பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன்.
ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றார்.
யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்தில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்க வேண்டும் - சிறிதரன் எம்.பி வலியுறுத்தல் samugammedia யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை. 1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன். அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை. சட்டக்கல்வி வாய்ப்பு யாழ். பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன்.ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றார்.