சட்ட விரோதமாக முறையில் மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட நால்வர் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்ஜன்ட் சதீஷ் உட்பட பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்ட விரோதமாக தயாரிப்பு செய்த 20 லீட்டர் கசிப்பு(மதுபானம்) உட்பட உபகரணங்கள் கைப் பற்ற பட்டதுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 23 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கூறி 20 ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது. சட்ட விரோதமாக முறையில் மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட நால்வர் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்ஜன்ட் சதீஷ் உட்பட பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்ட விரோதமாக தயாரிப்பு செய்த 20 லீட்டர் கசிப்பு(மதுபானம்) உட்பட உபகரணங்கள் கைப் பற்ற பட்டதுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த சந்தேக நபர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 23 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கூறி 20 ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.