• Nov 25 2024

புறா தீவு தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு..!

Chithra / Dec 20th 2023, 2:33 pm
image

  

வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் சூறாவளி சீசன் வருவதால் திருகோணமலை நிலாவெளி புறா தீவு தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி இறுதி வரை கடலின் இந்த கரடுமுரடான தன்மை நீடிக்கும் என்றும், இதற்கிடையில் கடல் சாதாரணமாக இருக்கும் சில நாட்களில் சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படலாம் என்றும் புறா தீவு பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

புறா தீவு தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு.   வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் சூறாவளி சீசன் வருவதால் திருகோணமலை நிலாவெளி புறா தீவு தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு பெப்ரவரி இறுதி வரை கடலின் இந்த கரடுமுரடான தன்மை நீடிக்கும் என்றும், இதற்கிடையில் கடல் சாதாரணமாக இருக்கும் சில நாட்களில் சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படலாம் என்றும் புறா தீவு பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement