நாட்டின் உயரிய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தின் படி எமது நடத்தைகள் மற்றும் செயற்பாடுகள் உயர் விழுமியங்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்,
நாகரீகமான சமூகத்தில் பணிவாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தெவிநுவர விகாரைக்கு பல சேவைகளை செய்துள்ளதாகவும்,
அந்த சேவைகளை மேலும் தொடர்வதே தனது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சசுணட்ட அருண என்ற நிகழ்ச்சியின் கீழ் தெவிநுவர விகாரையின் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வழிபாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் கருத்து நாட்டின் உயரிய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தின் படி எமது நடத்தைகள் மற்றும் செயற்பாடுகள் உயர் விழுமியங்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும், நாகரீகமான சமூகத்தில் பணிவாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.மேலும், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தெவிநுவர விகாரைக்கு பல சேவைகளை செய்துள்ளதாகவும், அந்த சேவைகளை மேலும் தொடர்வதே தனது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சசுணட்ட அருண என்ற நிகழ்ச்சியின் கீழ் தெவிநுவர விகாரையின் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.