எதிர்வரும் இரண்டு வருடங்களில் வருடாந்த தேங்காய் உற்பத்தியை 3,600 மில்லியனாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் வருடாந்த தேங்காய் உற்பத்தியானது 3,000 மில்லியனாக காணப்படுகிறது.
அவற்றுள் 1,700 மில்லியன் தேங்காய்கள் வருடாந்த நுகர்வுக்கு பயன்படுகின்றன.
அதேநேரம், தேங்காய் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படவுள்ளது.
தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தெங்கு கன்றுகளை விநியோகித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் உற்பத்தியை 3,600 மில்லியனாக அதிகரிக்க திட்டம். Samugammedia எதிர்வரும் இரண்டு வருடங்களில் வருடாந்த தேங்காய் உற்பத்தியை 3,600 மில்லியனாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.தற்போது, நாட்டில் வருடாந்த தேங்காய் உற்பத்தியானது 3,000 மில்லியனாக காணப்படுகிறது.அவற்றுள் 1,700 மில்லியன் தேங்காய்கள் வருடாந்த நுகர்வுக்கு பயன்படுகின்றன.அதேநேரம், தேங்காய் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படவுள்ளது.தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தெங்கு கன்றுகளை விநியோகித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.