• Nov 23 2024

வடகிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் திட்டம்: சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி! கஜேந்திரன் குற்றச்சாட்டு

Chithra / Dec 12th 2023, 9:11 am
image

 

வடக்கு முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்களின் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ள நிலையில்  வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கோடு திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. 

இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக்குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது.

இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி செய்கின்றதா? 

இந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கு ஐ.நா. நிறுவனங்கள் துணை புரிகின்றனவா? 

போரால் அழிக்கப்பட்ட எமது தேசத்தில் விவசாயத்தை கட்டி எழுப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கொக்குத்தொடுவாய் மேற்கில் இருக்கக்கூடிய 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் இடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்  என அவர் மேலும் தெரிவித்தார். 

வடகிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் திட்டம்: சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி கஜேந்திரன் குற்றச்சாட்டு  வடக்கு முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்களின் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ள நிலையில்  வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கோடு திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக்குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது.இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி செய்கின்றதா இந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கு ஐ.நா. நிறுவனங்கள் துணை புரிகின்றனவா போரால் அழிக்கப்பட்ட எமது தேசத்தில் விவசாயத்தை கட்டி எழுப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கொக்குத்தொடுவாய் மேற்கில் இருக்கக்கூடிய 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் இடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்  என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement