அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கிளியர்வாட்டர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, புளோரிடாவின் மொபைல் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது.
குறித்த விடயம் தொடர்ப்பில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பீச்கிராஃப்ட் பொனான்சா வி - 35 என்ற சிறிய ரக விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானி செயின்ட் பீட் - கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவசர நிலையை அறிவித்ததாக கூறினார்.
குடியிருப்பின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமானதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, விபத்து தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புளோரிடாவில் குடியிருப்பு மீது விழுந்த விமானம் - பலர் உயிரிழப்பு.samugammedia அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கிளியர்வாட்டர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, புளோரிடாவின் மொபைல் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. குறித்த விடயம் தொடர்ப்பில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பீச்கிராஃப்ட் பொனான்சா வி - 35 என்ற சிறிய ரக விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானி செயின்ட் பீட் - கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவசர நிலையை அறிவித்ததாக கூறினார். குடியிருப்பின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமானதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, விபத்து தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.