• May 22 2026

கழுத்தில் கத்தி வைத்து ஆபத்தான முறையில் விளையாட்டு; சிகையலங்கார நிலையத்தில் சிறுவனுக்கு நடந்த விபரீதம்

Chithra / Jan 5th 2026, 8:15 am
image


கந்தளாய் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், கத்தியை வைத்து ஆபத்தான முறையில் விளையாடியதில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்தில் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சூரியபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை  இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து குறித்த சிகையலங்கார நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு ஒருவருக்கு முடி வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சிகையலங்காரக் கருவிகளைக் கொண்டு ஏனைய இருவர் விளையாடியுள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக 15 வயதுடைய  சிறுவனின் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும், கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார், .

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த கந்தளாய் பொலிஸார், காயத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் சூரியபுர பகுதியைச் சேர்ந்த  இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கழுத்தில் கத்தி வைத்து ஆபத்தான முறையில் விளையாட்டு; சிகையலங்கார நிலையத்தில் சிறுவனுக்கு நடந்த விபரீதம் கந்தளாய் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், கத்தியை வைத்து ஆபத்தான முறையில் விளையாடியதில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்தில் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சூரியபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று மாலை  இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆறு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து குறித்த சிகையலங்கார நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு ஒருவருக்கு முடி வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சிகையலங்காரக் கருவிகளைக் கொண்டு ஏனைய இருவர் விளையாடியுள்ளனர்.இதன்போது எதிர்பாராத விதமாக 15 வயதுடைய  சிறுவனின் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார், .இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த கந்தளாய் பொலிஸார், காயத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் சூரியபுர பகுதியைச் சேர்ந்த  இளைஞரைக் கைது செய்துள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement