வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கரிநாள் பேரணிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் கரிநாளாக அனுஸ்டிக்க பல்கலைக் கழக மாணவர்கள் முன்வந்திருப்பதையிட்டு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை, எதிர்வரும் 4 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அன்றைய நாளை கரிநாளாக கடைப்பிடித்து பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.
வடக்கு கிழக்கிலே உள்ள அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரும் பல்கலை கழக மாணவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களது கரிநாள் பேரணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
கரிநாளன்று வடமாகாணத்திலே கிளிநொச்சியிலும் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள பேரணி மற்றும் கூட்டங்களுக்கு அணிதிரண்டு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கரிநாள் பேரணிக்கு ஆதரவு வழங்குங்கள்.கனகரஞ்சினி வேண்டுகோள்.samugammedia வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கரிநாள் பேரணிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் கரிநாளாக அனுஸ்டிக்க பல்கலைக் கழக மாணவர்கள் முன்வந்திருப்பதையிட்டு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.அதேவேளை, எதிர்வரும் 4 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அன்றைய நாளை கரிநாளாக கடைப்பிடித்து பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.வடக்கு கிழக்கிலே உள்ள அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரும் பல்கலை கழக மாணவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களது கரிநாள் பேரணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். கரிநாளன்று வடமாகாணத்திலே கிளிநொச்சியிலும் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள பேரணி மற்றும் கூட்டங்களுக்கு அணிதிரண்டு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.