• Nov 25 2024

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Chithra / Dec 20th 2023, 3:11 pm
image

 

வரவு – செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது 2024 ஆம் ஆண்டில், மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

உத்தியோகத்தர்களின் இடமாற்றம், வெற்றிடங்களை நிரப்புதல், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் மாகாண சபைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் குறித்த திருத்தம் தொடர்பாகவும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை  வரவு – செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.அலரி மாளிகையில் ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்போது 2024 ஆம் ஆண்டில், மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.உத்தியோகத்தர்களின் இடமாற்றம், வெற்றிடங்களை நிரப்புதல், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் மாகாண சபைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் குறித்த திருத்தம் தொடர்பாகவும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement