• Nov 25 2024

கிளிநொச்சியில் கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்...!!samugammedia

Tamil nila / Feb 1st 2024, 8:55 pm
image

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ்  உத்தியோத்தர்  ஒருவர்படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அதாவது  இன்றைய தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த  தருமபுரம் பொலிஸார் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை  சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.



அதன் பொழுது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி  பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கிளிநொச்சியில் கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்.samugammedia கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ்  உத்தியோத்தர்  ஒருவர்படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதாவது  இன்றைய தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த  தருமபுரம் பொலிஸார் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை  சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.அதன் பொழுது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி  பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement