• Apr 17 2026

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Chithra / Jan 25th 2026, 4:56 pm
image

 மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

 

பின்னர் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


கத்தோலிக்க திருச்சபையின் உயர் பாதிரியார்களுக்கு அவர் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பாதிரியார் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு  மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கத்தோலிக்க திருச்சபையின் உயர் பாதிரியார்களுக்கு அவர் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பாதிரியார் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement