வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது.
தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு தொடர்பான பொலிஸ்பிரிவின் கூற்றுப்படி, உள்ளூர் சபைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிகம பொலிஸ்பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதேசசபைத் தலைவர் மீது பிஸ்டல் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; அறிக்கையை வெளியிட்ட பொலிஸார் தீவிர விசாரணை வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பான பொலிஸ்பிரிவின் கூற்றுப்படி, உள்ளூர் சபைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக் கொலை செய்துள்ளார். இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிகம பொலிஸ்பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.