தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய 5 டிப்பர்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தர்மபுரம் பறவைகள் சரணாலயம் பகுதியில் அனுமதி இன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு பறவைகள் சரணாலயம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர் வாகனங்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் தகவலுக்கு அமைவாக இன்று அதிகாலை தருமபுர பொலிசார் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர், குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளப்பின் மூலம் 5 டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த டிப்பர் சாரதிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த தடையை பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிய 5 டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய 5 டிப்பர்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தர்மபுரம் பறவைகள் சரணாலயம் பகுதியில் அனுமதி இன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு பறவைகள் சரணாலயம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர் வாகனங்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் தகவலுக்கு அமைவாக இன்று அதிகாலை தருமபுர பொலிசார் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர், குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளப்பின் மூலம் 5 டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த டிப்பர் சாரதிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த தடையை பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.