• Oct 10 2024

வேகத்தை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து விபத்து - பொலிஸ் சார்ஜன்ட் பலி!

Chithra / Oct 10th 2024, 9:13 am
image

Advertisement


பாதுக்க - தும்மோதரவிலிருந்து இஹல போபே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் துன்மோதர பிரதேசத்தில் வசித்து வந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 53 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.

மேலும், பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனத்தில் அமர்ந்திருந்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்போர - ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வேகத்தை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து விபத்து - பொலிஸ் சார்ஜன்ட் பலி பாதுக்க - தும்மோதரவிலிருந்து இஹல போபே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தவர் துன்மோதர பிரதேசத்தில் வசித்து வந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 53 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.மேலும், பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனத்தில் அமர்ந்திருந்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.தம்போர - ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement