வணிக வளாகத்தில் கத்தியுடன் நின்ற நபரை பொலிஸார் சுட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
இந்தச் சம்பவம் ஹொங்ஹொங்கின் டுயென் முன் எனும் இடத்தில் நேற்று(15) மாலை இடம்பெற்றுள்ளது.
டுயென் முன் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மக்கள் வழமை போல் பொருள்களை கொள்வனவு செய்தனர்.
இதன்போது நபரொருவர் அங்கு திடீரென கத்தியை வைத்த ஆங்காங்கே செல்லும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
இதனால் மக்களும் பயத்தில் திணறிக்கொண்டு சென்றனர். இதனை அவதானித்த பொலிஸார் அவரை மடக்கிப் பிடிப்பதற்காக துப்பாக்கிப பிரயோகத்தை மேற்கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டுச் சத்தத்தை கேட்டு உசாரான நபர், அங்கிருந்த பெண்ணை பிடித்து இழுத்து அவரை வைத்து மிரட்டினார்.
எனினும் பொலிஸார் குறித்த நபர் மீது இரு தடவை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர். இதனால் காயமடைந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தியை வைத்து மிரட்டியதால் பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதில் அங்கிருந்த மக்கள் பயத்தில் திணறிக்கொண்டு ஓடினர்.
இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹொங்ஹொங்கில் கத்தியுடன் மிரட்டிய நபரை சுட்டுத்தள்ளிய பொலிஸார் வணிக வளாகத்தில் கத்தியுடன் நின்ற நபரை பொலிஸார் சுட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பாகியுள்ளது. இந்தச் சம்பவம் ஹொங்ஹொங்கின் டுயென் முன் எனும் இடத்தில் நேற்று(15) மாலை இடம்பெற்றுள்ளது. டுயென் முன் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மக்கள் வழமை போல் பொருள்களை கொள்வனவு செய்தனர். இதன்போது நபரொருவர் அங்கு திடீரென கத்தியை வைத்த ஆங்காங்கே செல்லும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதனால் மக்களும் பயத்தில் திணறிக்கொண்டு சென்றனர். இதனை அவதானித்த பொலிஸார் அவரை மடக்கிப் பிடிப்பதற்காக துப்பாக்கிப பிரயோகத்தை மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூட்டுச் சத்தத்தை கேட்டு உசாரான நபர், அங்கிருந்த பெண்ணை பிடித்து இழுத்து அவரை வைத்து மிரட்டினார். எனினும் பொலிஸார் குறித்த நபர் மீது இரு தடவை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர். இதனால் காயமடைந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தியை வைத்து மிரட்டியதால் பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதில் அங்கிருந்த மக்கள் பயத்தில் திணறிக்கொண்டு ஓடினர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.