• Sep 30 2024

யாழ்.மாவட்டம் முழுவதும் பொலிஸார் விசேட நடவடிக்கை - 70 பேர் கைது..!!samugammedia

Tamil nila / Dec 19th 2023, 9:13 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய  அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர். 

மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் , தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் வந்த விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும் , போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


யாழ்.மாவட்டம் முழுவதும் பொலிஸார் விசேட நடவடிக்கை - 70 பேர் கைது.samugammedia யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய  அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர். மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் , தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் வந்த விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும் , போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement