மின்சார வாகனங்களுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருக்கு போதிய தெளிவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெளிவேரிய பகுதியில் புதிய மின்சார வாகனத்தில் பயணித்த ஒருவரை போக்குவரத்து பொலிஸார் இடைமறித்து, வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிற இலக்கத் தகடு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதிய இலக்கத் தகடு தொடர்பில் தமக்கு போதிய தகவல் தெரியாது என பொலிஸார் தெரிவித்ததுடன், அது போலியான இலக்கத் தகடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி உள்ளிட்ட சட்டப்பூர்வ ஆவணங்களை காண்பித்து, குறித்த இலக்கத் தகடு சட்டபூர்வமானது என்பதை வாகன உரிமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள வாகன உரிமையாளர், சம்பவத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறைகள் மற்றும் சட்ட மாற்றங்கள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருக்கு உரிய அதிகாரிகளால் போதிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாமையே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏனைய மின்சார வாகன உரிமையாளர்கள் இதுபோன்ற தேவையற்ற அசௌகரியங்களை எதிர்கொள்ளாத வகையில், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கும் மோட்டார் வாகன பதிவு தொடர்பான புதிய மாற்றங்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம், நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய வாகன பதிவு முறைகள் மற்றும் அடையாள அமைப்புகள் தொடர்பான தகவல்கள் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு முறையாக சென்றடைகின்றனவா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
பச்சை இலக்கத் தகடு குறித்து பொலிஸாருக்கு தெளிவின்மை மின்சார வாகன உரிமையாளர் குற்றச்சாட்டு மின்சார வாகனங்களுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருக்கு போதிய தெளிவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வெளிவேரிய பகுதியில் புதிய மின்சார வாகனத்தில் பயணித்த ஒருவரை போக்குவரத்து பொலிஸார் இடைமறித்து, வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிற இலக்கத் தகடு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.புதிய இலக்கத் தகடு தொடர்பில் தமக்கு போதிய தகவல் தெரியாது என பொலிஸார் தெரிவித்ததுடன், அது போலியான இலக்கத் தகடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி உள்ளிட்ட சட்டப்பூர்வ ஆவணங்களை காண்பித்து, குறித்த இலக்கத் தகடு சட்டபூர்வமானது என்பதை வாகன உரிமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள வாகன உரிமையாளர், சம்பவத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.புதிய நடைமுறைகள் மற்றும் சட்ட மாற்றங்கள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருக்கு உரிய அதிகாரிகளால் போதிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாமையே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்காலத்தில் ஏனைய மின்சார வாகன உரிமையாளர்கள் இதுபோன்ற தேவையற்ற அசௌகரியங்களை எதிர்கொள்ளாத வகையில், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கும் மோட்டார் வாகன பதிவு தொடர்பான புதிய மாற்றங்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த சம்பவம், நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய வாகன பதிவு முறைகள் மற்றும் அடையாள அமைப்புகள் தொடர்பான தகவல்கள் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு முறையாக சென்றடைகின்றனவா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.