• Nov 26 2024

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க பொதுக் கட்டமைப்பு - அரசியல், சிவில் தரப்புக்கள் இணக்கம்!

Chithra / May 5th 2024, 3:23 pm
image

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேத்திரன், ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், புளொட் சார்பில் பவன் மற்றும் கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேச்சந்திரன், துரைரத்தினம் கமலாகரன் ஆகியோரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அதேபோன்று சிவில் அமைப்புக்களின் சார்பில் வேலன் சுவாமிகள், திருமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான யோதிலிங்கம் நிலாந்தன் யதீந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் முதலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் வவுனியாவில் சிவில் அமைப்புக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்த விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது. அப்போது கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் கொள்கை அளவில் பொதுவேட்பாளர் விடயத்தினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதோடு,

கட்சியாக தீர்மானம் எடுப்பதாக இருந்தால் அதன் மத்திய குழு கூட்டத்தினை நடத்திய பின்னர் தான் உத்தியோகபூர்வமான முடிவினை வெளியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழ் அரசு கட்சி தனது மத்திய குழுவினை கூட்டி முடிவெடுப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை மையப்படுத்திய பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக முன்மொழிவு செய்யப்பட்டது. 

குறித்த கட்டமைப்பை வினைத்திறனாக ஸ்தாபிப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவதற்காக பதினொருவர் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க பொதுக் கட்டமைப்பு - அரசியல், சிவில் தரப்புக்கள் இணக்கம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றிருந்தது.இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேத்திரன், ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், புளொட் சார்பில் பவன் மற்றும் கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேச்சந்திரன், துரைரத்தினம் கமலாகரன் ஆகியோரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.அதேபோன்று சிவில் அமைப்புக்களின் சார்பில் வேலன் சுவாமிகள், திருமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான யோதிலிங்கம் நிலாந்தன் யதீந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.இந்நிலையில் முதலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் வவுனியாவில் சிவில் அமைப்புக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்த விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.அதனையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது. அப்போது கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் கொள்கை அளவில் பொதுவேட்பாளர் விடயத்தினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதோடு,கட்சியாக தீர்மானம் எடுப்பதாக இருந்தால் அதன் மத்திய குழு கூட்டத்தினை நடத்திய பின்னர் தான் உத்தியோகபூர்வமான முடிவினை வெளியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் தமிழ் அரசு கட்சி தனது மத்திய குழுவினை கூட்டி முடிவெடுப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை மையப்படுத்திய பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக முன்மொழிவு செய்யப்பட்டது. குறித்த கட்டமைப்பை வினைத்திறனாக ஸ்தாபிப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவதற்காக பதினொருவர் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement